பிள்ளையார்பட்டி கிராமம், காரைக்குடிக்கு அருகில் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழகான நுழைவாயிலைக் கடக்கும்போதே தூரத்தில் வடக்கு நோக்கிய கோபுரம் தெரிகிறது. முன்னே தென்னங்கீற்றுகள் வேய்ந்த கொட்டகை. அத்துடன் எழில் கொஞ்சும் ஊருணி எனப்படும் திருக்குளம். வழியெல்லாம் அருகம்புல் மாலையும் வாசமுள்ள ஆளுயுர சம்பங்கி மாலையும் மதுரை மல்லியும் விற்கும் பூக்கடைகள்.
கோயிலுக்கு இரு வாசல்கள். கிழக்கில் உயரிய பெரிய கோபுரம். கோயில் நிர்வாகம் நடத்தும் தேங்காய், பழக் கடையில் அர்ச்சனைத் தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால், நேர்த்தியான சிற்பங்களைக் காணலாம். தூணில் உள்ள ரிஷபாரூடரை நிதானமாகப் பாருங்கள். மனதைக் கொள்ளை கொள்ளும்!
06.00 A.M - 06.30 A.M
08.30 A.M - 09.30 A.M
11.30 A.M - 12.00 P.M
05.00 P.M - 06.30 P.M
07.45 P.M - 08-30 P.M
நடை திறக்கும் நேரம் : 06:00 A.M - 01:30 P.M
04:00 P.M - 08:30 P.M
நடை சாற்றும் நேரம் : 01:30 P.M - 04:00 P.M
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அன்று கொண்டாடப்படும் "விநாயகர் சதுர்த்தி" இந்த கிராமத்தின் முக்கிய திருவிழாவாகும். இவ்விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காப்புகட்டு மற்றும் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி, 6ம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில், விநாயகப் பெருமான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் அமர்ந்து வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்.