அதிகாரப்பூர்வமான பிள்ளையார் பட்டி கோவில் இணையதளம்.

மருத்துவமனை
/ /
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் இலவச மருத்துவமனை பிள்ளையார்பட்டி

இம்மருத்துவமனை 1991 ஆம் நாள் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில் அறங்காவலர்களால் ஏழை எளிய கிராம விவசாயிகளின் நல்லெண்ணத்தோடு பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டது.

இம்மருத்துவமனை சுற்று வட்டார கிராமங்களாகிய மருதங்குடி, மேட்டுப்பட்டி, சிராவயல், புதுக்குடி, கீழயப்பட்டி நாச்சியாபுரம் கொரட்டி, தட்டட்டி, துளாவூர், பாநரக்குடி, கும்மங்குடி, N பைரம்பட்டி, K.ஆத்தங்குடி, சிறுகூடல்பட்டி, அதிகரம், தென்கரை, வளையப்பட்டி, சமத்துவபுரம், ஊர் குளத்தான் பட்டி, இலங்குடி, குன்றக்குடி, நேமம் உடையார் குடியிருப்பு போன்ற இருபத்துமூன்று கிராமங்களுக்கு மேல் உள்ள மக்கள், திருக்கோயில் சிப்பந்திகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் போன்ற போன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், மேலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் அவசர முதல் உதவி சிகிச்சைக்காகவும் உதவிகள் பெறும் வகையிலும் கற்பக விநாயகர் திருக்கோயில் அறங்காவலர்கள் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

நகரத்தார் கட்டடத்தில் (இந்தியன் பேங்க் அருகில்) செயல்பட்டு வந்த இம்மருத்துவமனை 6. 12 .1987 ஆம் ஆண்டு பயனாளிகளின் வசதிக்காக புதிதாக பிரம்மாண்டமாக தனி கட்டிடம் கட்டி தற்போது வரை ஆண்டுகளாக செயல்பட்டு ஆண்டுதோறும் சுமார் 18000 மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும் மாதந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள், திருவிழா, வருடப்பிறப்பு போன்ற நாட்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி மருத்துவ உதவிகளைச் செய்து கற்பக விநாயகர் அறங்காவலர்கள் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.

மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியாக Dr. உஷா MBBS அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மருத்துவருக்கு உதவியாக செவிலியர், லேப் டெக்னீசியன், மருந்தாளுநர் என ஆறு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.