மருதீசப் பெருமான் பள்ளியறையில் இருந்து மூலாலயத்திற்கு எழுந்தருளல். மருதீசர், வாடாமலர் மங்கை, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு நெய்வேத்யம் மற்றும் தீபாராதனை செய்தல்.
சிவ சூரிய பூஜை நடைபெறும், விநாயகப் பெருமான் திருவீசர், மருதீசர், வாடாமலர் மங்கை உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து விசேஷ பூஜை செய்யப்படும்.
விநாயகர், திருவீசர், உற்சவர், சிவகாமி அம்பாள், மருதீசர், நடராஜர், சோமஸ்கந்தர், சுப்ரமண்யர், வாடாமலர் மங்கை சண்டி கேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு நெய்வேத்ய பூஜை நடைபெறும்.
விநாயகப் பெருமான், திருவீசர், சிவகாமி அம்பாள், மருதீசர், வாடாமலர் மங்கை உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் விசேஷ பூஜை நடைபெறும்.
விநாயகப் பெருமான் உள்ளிட்ட பிரதான சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படும். சுவாமி பள்ளியறைக்கு எழுந்தருளல், இதனைத் தொடர்ந்து பள்ளியறையில் விசேஷ பூஜை நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் ஆகிய சுவாமிகளுக்கு பூஜை நடைபெறும்.
மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தியில் விநாயகப் பெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
மாலை விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில், உள் பிரகாரத்தில் வலம் வருவார்.
மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பெற்று வடமாலை சாற்றி சிறப்பு பூஜையானது நடைபெறும்.
வருடப் பிறப்பு தினமான சித்தரை முதலாம் நாள் அன்று விநாயகப் பெருமான் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம் செய்யப் பெறும்.
மாலை விநாயகப் பெருமான் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கப்பெறும். இதனைத் தொடர்ந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப்பெருமானும்,வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திர சேகரரும் உள் பிரகாரத்தில் வலம் வருவர்.
பிள்ளையார்பட்டி கிராம தேவதையான ஸ்ரீ கொங்கு நாச்சி அம்மனுக்கு பத்து நாள் செவ்வாய் உற்சவம் நடைபெறும். விழா நாட்களில் யாகசாலை பூஜை, திருத்தேர், பூப்பல்லாக்கு உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும்.
ஆனி உத்திரம் நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
ஆடிப்பூர நன்னாளில் சிவகாமி அம்பாள், வாடாமலர் மங்கை அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பெற்று முலைப்பயிறு மடியில் கட்டி, உபச்சாரத்துடன் விசேஷ பூஜை செய்யப்பெற்று அனைத்து பரிவார அம்மன் சன்னதிகளிலும் விசேஷ பூஜை நடைபெறும்.
ஆவணி உற்சவம் முதல் நாள் காலை கொடியேற்றம், மாலை வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா நடைபெறும். இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை விநாயகப் பெருமான் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் திருவீதி உலா வருவார். காலை வேலைகளில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வெள்ளி கேடகத்தில் திருவீதிஉலா வருவர்.
இரண்டாம் திருநாள் - சிம்ம வாகனம்
மூன்றாம் திருநாள் - பூத வாகனம்
நான்காம் திருநாள் - கமல வாகனம்
ஐந்தாம் திருநாள் - ரிஷப வாகனம்
ஆறாம் திருநாள் - சூரசம்ஹாரம்
ஏழாம் திருநாள் - மயில்வாகனம்
எட்டாம் திருநாள் - குதிரை வாகனம் எட்டாம் திருநாள் குதிரை வாகனம்
ஒன்பதாம் திருநாள் - திருத்தேர் இரவு - யானை வாகனம்
பத்தாம் திருநாள் - காலை தீர்த்தவாரி உற்சவம் மாலை பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறும்.
ஒன்பதாம் திருநாள் அன்று ஆண்டுக்கு ஒரு முறை மூலவருக்கு சந்தனக்காப்பு நடைபெறும்.
ஆவணி சதுர்தசியில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
நவராத்திரி நாட்களில் சிவகாமி அம்பாள், வாடாமலர் மங்கை அம்பாளுக்கு தினந்தோறும் மாலை விசேஷ பூஜை நடைபெறும். பரிவாரத்தில் உள்ள அனைத்து பெண் தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெறும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு மும்மூன்று நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
சதுர்தசியில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
தீபாவளி தினத்தன்று விநாயகர் முதலான அனைத்து சுவாமிகளுக்கு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பெறும்.
கார்த்திகை மாதம் ' திருக்கார்த்திகை ' தினத்தன்று மாலை கோபுரத்தில் விளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.
கற்பக விநாயகர், மருதீசர் சன்னதிகளில் தீபச்சுடர் ஏற்றப்பெற்று, அனைத்து மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பெற்று விளக்கேற்றப்பெறும். ஸ்ரீ கற்பக விநாயகப்பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் திருவீதிஉலா வருவர்.
விநாயகர் சன்னதி முன்பும், மறுதீசர் சன்னதி முன்பும் சொக்கப்பனை ஏற்றப்பெறும்.
தினந்தோறும் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். திருவாதிரைக்கு பத்து நாட்கள் முன்பு மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டி, திருவெம்பாவை உற்சவம் நடைபெறும். இந்த பத்து நாட்களும் மாணிக்கவாசகர் திருக்கோயிலில் உள் பிரகாரத்தில் வலம் வருவார்.
திருவாதிரை அன்று காலை நடராஜர், மாணிக்கவாசகர், சிவகாமி அம்பாள், சுந்தரர் ஆகியோருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பெற்று சுவாமி வீதி உலா நடைபெறும். அன்று ஊடல் உற்சவம் நடைபெறும்.
தை முதல் நாள் விநாயகர் சன்னதி முன்பு பொங்கல் பானை வைத்து பால் பொங்கியவுடன் பொங்கல் செய்து, உச்சி காலத்தில் விநாயகர் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் விசேஷ பூஜைகள் செய்யப்பெறும்.
சதுர்தசியில் நடராஜருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்.